பிரசன்னா, சினேகா நடித்து அமெரிக்காவிலேயே தயாரான படம் அச்சமுண்டு அச்சமுண்டு. என்ன அச்சமோ, தமிழகத்தில் இன்னும் படத்தை ரிலீஸ் செய்யவில்லை. ஆனால், பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு ஃபிரஷ் ஆக அனுப்பப்படுகிறது இப்படம். லேட்டஸ்டாக ஷாங்காயில் நடக்கும் 12 வது திரைப்பட விழாவில் இப்படத்தை திரையிட தேர்வு செய்திருக்கிறார்கள். எழுபது நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான படங்கள் போட்டியிட்டாலும், தேர்வு செய்யப்படும் படங்களோ வெறும் எழுபது மட்டுமே! அதில் ஒன்று இந்த படம்! ஏற்கனவே 'கார்டன் ஸ்டேட்' திரைப்பட விருது விழாவில் 'ஹோம் குரோன்' விருது வாங்கியிருக்கிறதாம் இந்த படம். இப்போது மேலும் ஒரு கௌரவம். அருண் வைத்தியநாதன் இயக்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல, படத்தின் தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர். 'தினமும் முப்பதாயிரம் பேர் பார்வையிடும் இத்திரைப்பட விழா மிக முக்கியமான திரைப்பட விழாவாகும். ஸ்லம் டாக் மில்லியனர் படத்தின் இயக்குனர் டேனி பாய்ல் நீதிபதியாக இருந்து படங்களை தேர்வு செய்ய முன் வந்திருக்கிறார். அதுவே எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி' என்றார் அருண் வைத்தியநாதன். அப்படியே தமிழ்நாட்டு பக்கமும் வாங்க சார்... -ஆர்.எஸ்.அந்தணன்
Wednesday, May 13, 2009
ஷாங்காய் திரைப்பட விழாவில் 'அச்சமுண்டு அச்சமுண்டு'
Posted by Election Flu at 5:20 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment