தோரணை ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கக்கூடிய நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் விஷால். கூடவே வந்திருந்தார் படத்தின் இயக்குனர் சபா ஐயப்பன்! படப்பிடிப்பில் விஷாலிடம் அடி வாங்கியதாக வந்த செய்திகளை மறுத்த ஐயப்பன், 'எங்க ஹீரோவுக்கு வில்லனை அடிக்கவே நேரமில்லை. இதிலே என்னை அடிக்க அவருக்கு எது நேரம்? அதெல்லாம் பொய்யுங்க' என்றார் கவலையோடு! கிராமத்திலிருந்து அண்ணனை தேடி சென்னைக்கு வரும் ஒருவனின் கதைதான் தோரணை. முதல் பாதி முழுக்க குலுங்க வைக்கும் காமெடி. இரண்டாவது பாதி அதிர வைக்கும் ஆக்ஷன். நான் ஆக்ஷன் ஹீரோவாக ஆகணும்னு நினைச்சு வரலே. லிங்குசாமியோட சண்டக்கோழி கதைய பற்றி கேள்விப்பட்டதும், நானே அவரை தேடிப் போய் வாய்ப்பு கேட்டேன். அந்த படத்திலே இருந்து எனக்கு ஆக்ஷன் ஹீரோ இமேஜ் வந்திருச்சு. காமெடி படங்களில் நடிக்கணும் என்பதுதான் என்னோட ஆசை. ஏற்கனவே மலைக்கோட்டையிலே 'ட்ரை' பண்ணியிருந்தேன். கவுண்டமணிதான் என்னோட ஃபேவரைட். நான் காமெடியிலே ஒருவேளை வெற்றியடைஞ்சா அந்த வெற்றியை அவருக்குதான் அர்ப்பணிக்கிறேன் என்றார் விஷால். த்ரிஷா, நயன்தாராவுடன் காதல் பற்றிய வழக்கமான கேள்விகளுக்கு, 'பேசி பேசி எனக்கே போரடிச்சுருச்சு. விட்ருங்க சார்' என்றார் பரிதாபமாக. அடுத்து பூபதி பாண்டியன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போகிறாராம். -ஆர்.எஸ்.அந்தணன்
Wednesday, May 13, 2009
பேசி பேசி போரடிச்சுருச்சு... விஷால் அலுப்பு
Posted by Election Flu at 5:16 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment