அடுத்தவங்க பாக்கெட்ல என்ன இருக்குங்கறதை 'படக்'குன்னு சொல்லிடுற மோடி மஸ்தான் கூட விஜயோட 50 வது படத்தோட இயக்குனர் யாருன்னு கேட்டா, பேந்த பேந்த முழிப்பான். சித்திக்குலே ஆரம்பிச்சு, ஜெயம் ராஜா வரைக்கும் நீள்கிற இந்த இயக்குனர்கள் லிஸ்ட், இப்போ ஒரு வழியா ஃபைனல் ஆயிருச்சு என்பதுதான் நம்ம காதுக்கு வந்த செய்தி. சிவகாசி, திருப்பாச்சின்னு இரண்டு படங்கள்தான் விஜய்க்கு பெரிய ஹிட்டையும், துட்டையும் கொடுத்தது! கையிலே சிகரெட்டை வச்சுகிட்டு கடை, கடையா அலைவானேன்? பேசாம கூப்பிடுங்க, பேரரசுவை என்றாராம் விஜய். இருவரும் பேசி பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். என்னவென்று? தனது ஐம்பதாவது படத்தை பேரரசுவே இயக்கட்டும். கதை, திரைக்கதை, வசனம் மட்டும் வேறொருத்தர். அந்த வேறொருத்தரையும் ரெடி பண்ணிட்டாராம் விஜய். பொன்மனம் என்ற நகைச்சுவை படத்தையும், தற்போது அழகர் மலை என்ற படத்தையும் இயக்கி வரும் எஸ்.பி.ராஜ்குமார்தான் அவர். வைகைப்புயல் வடிவேலுவுக்கு தொடர்ந்து நகைச்சுவை டிராக் எழுதிக் கொடுத்தவரும் இவர்தான். ஆக்ஷனுக்கு பேரரசு. காமெடிக்கு ராஜ்குமார், இந்த கலவை, தனது கம்பீரமான கலையுலக வாழ்க்கையை சலவை செய்யும் என்று நம்புகிறாராம் விஜய். அதே மாதிரி படத்தை தயாரிக்கப் போவது விஜயின் அப்பா எஸ்.ஏ.சி இல்லையாம். வெயிட்டான வேறொரு தயாரிப்பாளர். எல்லாம் சென்ட்டிமென்ட்தான்! -மக்கு மாலா
Wednesday, May 13, 2009
விஜயின் 50 வது படம்?
Posted by Election Flu at 5:24 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment