ஒளிப்பதிவாளர் ஜீவாவின் மறைவிற்கு பிறகு, அவரது லட்சியத்தை அணையாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் அவரது மனைவி அனீஸ். வெறும் ஒளிப்பதிவாளராக மட்டுமில்லாமல், நல்ல இயக்குனராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். ஜீவாவை போலவே தன்னையும் டைரக்ஷன் துறையில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் அனீஸ். முத்திரை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அனீசின் பேச்சு ஜீவாவின் ஆத்மாவை குளிர வைத்திருக்கும்! திரைத்துறைக்காக தனது வாழ்நாளை அர்ப்பணிக்க வேண்டும் என்பது என் கணவர் ஜீவாவின் ஆசை. அதற்குள் அவர் மறைந்துவிட்டார். அவர் விட்டு சென்ற பணியை நான் தொடர்வேன். ஜீவானின் நண்பர் டைரக்டர் விக்ரம் பட். முதன் முறையாக அவருடன் இணைந்து முத்திரை படத்தை தயாரிக்கிறேன். இதையடுத்து ஒரு படத்தை நானே இயக்குகிறேன். படத்தின் பெயர் 'அதையும் தாண்டி' இதில் புதுமுகங்கள் நடிக்கிறார்கள் என்றார். |
இதையடுத்து பின் குறிப்பு என்ற இன்னொரு படத்தையும் விக்ரம் பட்டுடன் இணைந்து தயாரிக்கிறாராம் அனீஸ். வெற்றிகள் குவியட்டும்...
-மனஸ்வினி
0 comments:
Post a Comment